குப்பைக்கிடங்கில் திடீர் தீ


குப்பைக்கிடங்கில் திடீர் தீ
x
தினத்தந்தி 15 Oct 2021 9:33 PM IST (Updated: 15 Oct 2021 9:33 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி குப்பைக்கிடங்கில் திடீரென தீப்பற்றி எரிந்தது.

கோவில்பட்டி:
எட்டயபுரம் ரோட்டில் குமாரகிரி கிராமத்தில் கோவில்பட்டி நகரசபை குப்பைக்கிடங்கு உள்ளது. இங்கு கோவில்பட்டி நகரில் சேரும் குப்பை கழிவுகள், லாரிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டு அங்கு மக்கும் குப்பைகள். மக்காத குப்பைகள் என்று பிரிக்கப்பட்டு, மக்கும் குப்பைகளை உரமாக்குகிறார்கள்.
இந்த நிலையில் அங்கு நேற்று பகலில் திடீர் என தீப்பிடித்தது. தகவல் அறிந்ததும் கோவில்பட்டி தீயணைப்பு நிலைய அதிகாரி அருள்ராஜ் தலைமையில் 2 வாகனங்களில் வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று 5 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

Next Story