தேங்காய்திட்டு வெங்காயத்துக்கு புவிசார் குறியீடு


தேங்காய்திட்டு வெங்காயத்துக்கு புவிசார் குறியீடு
x
தினத்தந்தி 15 Oct 2021 9:56 PM IST (Updated: 15 Oct 2021 9:56 PM IST)
t-max-icont-min-icon

தேங்காய்திட்டு வெங்காயம், முத்துமல்லிக்கு புவிசார் குறியீடு பெறுவது தொடர்பாக அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள்.

புதுச்சேரி, அக்.
தேங்காய்திட்டு வெங்காயம், முத்துமல்லிக்கு புவிசார் குறியீடு பெறுவது தொடர்பாக அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள்.
கலந்துரையாடல்
புதுச்சேரி மாநிலத்தில் தோட்டக்கலை பயிர் சாகுபடியை மேம்படுத்தவும், புதிய தொழில்நுட்பங்களை விவசாயிகளிடம் கொண்டு செல்லவும் வேளாண் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தலைமையில் பெங்களூரு இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிலைய இயக்குனர் மூர்த்தியுடன் வேளாண்துறை, வேளாண் அறிவியல் நிலையம், வேளாண் கல்லூரி மற்றும் பாசிக் அதிகாரிகளின் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது.
அப்போது புதுவை வேளாண்துறையும், பெங்களூரு இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி மையமும் கைகோர்த்து புதுச்சேரி பிரதேசத்துக்கு உகந்த தொழில்நுட்பங்கள் மூலம் பல்வேறு திட்டங்களை      அறிமுகப் படுத்த முடிவு செய்யப்பட்டது. 
மாடித்தோட்ட தொகுப்பு
அதன்படி, இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவன உதவியுடன் பல்வேறு தரமான விதைகளை புதுச்சேரி விவசாயிகளின் மூலம் உற்பத்தி செய்து அவைகளை பெங்களூருவில் இயங்கும் தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலம் விற்பனை செய்வது. புதுச்சேரி மாநில விவசாய கல்லூரியில் (பஜன்கோ) படிக்கும் எம்.எஸ்.சி. (விவசாயம்) மற்றும் பி.எச்.டி. ஆராய்ச்சி மாணவர்களுக்கு உயர் ஆராய்ச்சி படிப்பதற்கான நேரடி ஆய்வு கல்வியை ஏற்பாடு செய்து தருவது. நகர பகுதிகளில் உள்ள வீடுகளில் மாடித்தோட்டம் அமைக்க தேவையான விதை மற்றும் உபபொருட்களை புதுச்சேரி அரசுக்கு தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம் வழங்குவது.
புவிசார் குறியீடு
புதுச்சேரியின் தனித்தன்மை வாய்ந்த தேங்காய்திட்டு வெங்காயம் மற்றும் முத்துமல்லி ஆகிய 2 உற்பத்தி பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்று தர உதவி செய்வது. புதுச்சேரி சூழ்நிலைக்கு ஏற்ற காய்கறி விதைகள் மற்றும் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
____


Next Story