பாலாற்றின் கரையோர பகுதிகள் ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்பு


பாலாற்றின் கரையோர பகுதிகள் ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்பு
x
தினத்தந்தி 15 Oct 2021 10:49 PM IST (Updated: 15 Oct 2021 10:49 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் பாலாற்றின் கரையோரபகுதிகள் ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டது.

வேலூர்

வேலூர் பாலாற்றின் கரையோரபகுதிகள் ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டது.

மழைவெள்ளம்

வேலூர் மாவட்டத்தில் பெய்துவரும் மழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகள் நிரம்பி வருகிறது. முக்கிய நீர் ஆதாரமான பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதன் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வதால் இரு கரைகளையும் தொட்டவாறு வெள்ளம் பாய்ந்தோடுகிறது. பாலாற்றில் அதிகமாக மழை வெள்ளம் வருவதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உத்தரவு

இந்த நிலையில் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக உள்ளார்களா? அவர்களின் வீடு பாதுகாப்பாக உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் உத்தரவிட்டார்.
 அவரது உத்தரவின் பேரில் வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார், பாலாற்றின் கரையோரம் உள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வுக்காக குட்டி விமானம் (ட்ரோன்) பயன்படுத்தப்பட்டது. சேண்பாக்கம், வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள குடியிருப்புகள் மற்றும் ஆற்றின் கரையோரம் உள்ள பகுதிகளில் ட்ரோன் கேமரா மூலம் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது ஆற்றின் கரையோரம் இடியும் நிலையில் உள்ள வீடுகளில் உரிமையாளர்களிடம் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுரை வழங்கினார். மேலும் மழை வெள்ளம் எப்போது வேண்டுமானாலும் வரக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Next Story