1-ந் தேதி முதல் திறப்பு: பள்ளிகளை கிருமிநாசினி தெளித்து தூய்மைப்படுத்த வேண்டும் உதவி தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அதிகாரி அறிவுரை


1-ந் தேதி முதல் திறப்பு: பள்ளிகளை கிருமிநாசினி தெளித்து தூய்மைப்படுத்த வேண்டும் உதவி தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அதிகாரி அறிவுரை
x
தினத்தந்தி 15 Oct 2021 10:56 PM IST (Updated: 15 Oct 2021 10:56 PM IST)
t-max-icont-min-icon

1-ந் தேதி முதல் 1-ம் வகுப்பில் இருந்து 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் அனைத்து பள்ளிகளையும் கிருமிநாசினி தெளித்து தூய்மைப்படுத்த வேண்டும் என்று உதவி தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அதிகாரி அறிவுறுத்தியுள்ளார்.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றி வரும் உதவி தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கிருஷ்ணப்பிரியா தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

10-ம் வகுப்பு புதிய தேர்வு மையம் கோரும் தலைமை ஆசிரியர்கள் அதற்கான கருத்துருவை வருகிற 18-ந் தேதிக்குள் சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். 
2021-22-ம் கல்வியாண்டில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான இலவச சைக்கிள் தேவைப்படும் பட்டியலை 18-ந் தேதிக்குள் விழுப்புரம் முதன்மை கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். EMIS என்ற இணையதளத்தில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை விவரத்தை நாளது தேதி வரை பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். பள்ளியின் வருகை பதிவேட்டில் தினமும் ஆசிரியர் வருகையை காலை 9.45 மணிக்குள் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

பள்ளிகளை தூய்மைப்படுத்த வேண்டும்

மேலும் 1.11.2021 முதல் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் வருகை புரியும் 6 முதல் 8-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு பயன்படுத்தப்படும் வகுப்பறைகள், 

ஆய்வகம், பள்ளி வளாகம், கழிவறைகள் மற்றும் மாணவர்கள் பயன்படுத்தும் அனைத்து இடங்களிலும் கிருமி நாசினி தெளித்து தூய்மைப்படுத்த வேண்டும். 3, 5, 8, 10-ம் வகுப்பு மாணவர்களை தேசிய திறனறிவு ஆய்வுத்தேர்வுக்கு தயார் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட கல்வி அலுவலர்கள் விழுப்புரம் கிருஷ்ணன், திண்டிவனம் சாந்தி, செஞ்சி அமுதா, முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் சேவியர் சந்திரகுமார், காளிதாஸ், முதன்மை கல்வி அலுவலக கண்காணிப்பாளர்கள் கோகுலகண்ணன், வெங்கடேசபெருமாள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Next Story