அரக்கோணம் அருகே குடும்ப தகராறில் கணவன், மனைவி தூக்குப்போட்டு தற்கொலை


அரக்கோணம் அருகே குடும்ப தகராறில் கணவன், மனைவி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 15 Oct 2021 11:17 PM IST (Updated: 15 Oct 2021 11:17 PM IST)
t-max-icont-min-icon

அரக்கோணம் அருகே குடும்ப தகராறில் கணவன்- மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

அரக்கோணம்

அரக்கோணம் அருகே குடும்ப தகராறில் கணவன்- மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

தூக்குப்போட்டு தற்கொலை

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த அம்மனூர் பகுதியை சேர்ந்தவர் பாபு (வயது 38). கூலித் தொழிலாளி. இவரது மனைவி கிருஷ்ணவேணி (37). இவர்களுக்கு திருமணமாகி 17 ஆண்டுகள் ஆகிறது. 12-ம் வகுப்பு படிக்கும் ஒரு மகனும், 9-ம் வகுப்பு படிக்கும் ஒரு மகளும் உள்ளனர். கணவன்- மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. 

பாபு குடிப்பழக்கத்தால் வேலைக்கு செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் நேற்று முன்தினம் காலை முதல் கணவன்- மனைவியிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த கிருஷ்ணவேணி நேற்று முன்தினம் மதியம் தான் நடத்தி வரும் சிற்றுண்டி கடையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார்.

கணவனும் தூக்கில் தொங்கினார்

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கணவன் பாபு, மனைவி இறந்த துக்கம் தாங்க முடியாமல் வீட்டிற்கு சென்று அடுத்த ஒரு மணி நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

 இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த கிருஷ்ணவேணியின் உறவினர்கள் விரைந்து வந்து இருவரது உடல்களையும் யாருக்கும் தெரியாமல் சின்னமோசூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு கொண்டு சென்றுள்ளனர். இது குறித்து தகவலறிந்த அம்மனூர் கிராம நிர்வாக அலுவலர் உடனடியாக அரக்கோணம் டவுன் போலீசில் புகார் அளித்தார். 

புகாரின் பேரில் டவுன் போலீசார் பல்வேறு இடங்களில் தேடிய போது சின்ன மோசூரில் உள்ள உறவினர் வீட்டில் இருவரின் உடல்களும் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

Next Story