விஷம் குடித்த கொத்தனார் சாவு
விஷம் குடித்த கொத்தனார் பரிதாபமாக இறந்தார்.
லாலாபேட்டை
லாலாபேட்டை அருகே கொமட்டி ஏரியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் விஜி (வயது 21). கொத்தனார். இவர் மது அருத்தி கொண்டு சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால் விஜியை அவரது தாயார் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த விஜி சம்பவத்தன்று பூச்சி மருந்தை தண்ணீரில் கலந்து குடித்து மயங்கி விழுந்தார். இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று விஜி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story