பிரசவத்தில் 2 குழந்தைகள் பெற்ற தாய் சாவு


பிரசவத்தில் 2 குழந்தைகள் பெற்ற தாய் சாவு
x
தினத்தந்தி 15 Oct 2021 11:50 PM IST (Updated: 15 Oct 2021 11:50 PM IST)
t-max-icont-min-icon

பிரசவத்தில் 2 குழந்தை கள் பெற்ற தாய் திடீரென பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலாயுதம்பாளையம்
இரண்டு குழந்தைகள்
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே வள்ளுவர் நகர் முதல் தெருவை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 32). பில்டிங் கன்சக்சன் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கண்டியானூரை சேர்ந்த ஆனந்தி என்பவரது மகள் பாரதி (26) என்பவரை திருமணம் செய்து வைத்துள்ளனர். 
இவர்களுக்கு திருமணமாகி 2½ ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில் கர்ப்பம் அடைந்த பாரதிக்கு பிரசவவலி ஏற்பட்டதால் கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்த்தனர். அவருக்கு கடந்த 13-ந் தேதி இரட்டை குழந்தைகள் (ஆண் மற்றும் பெண்) பிறந்தது.
திடீர் சாவு
இந்நிலையில் பாரதிக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்துவிட்டார். இது குறித்து பாரதியின் மாமனார் காளியப்பன் (66) வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நெப்போலியன் வழக்குப்பதிவு செய்து பாரதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story