மகிஷாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி
மநவராத்திரி திருவிழா: கிஷாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி
ராமேசுவரம்
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் இந்த ஆண்டின் நவராத்திரி திருவிழா கடந்த 6-ந் தேதி அன்று காப்பு கட்டுதலுடன் தொடங்கி நடந்து வந்தது. இந்த நிலையில் நவராத்திரி திருவிழாவின் கடைசி நாள் மற்றும் முக்கிய நிகழ்ச்சியான நேற்று மகிஷாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதற்காக கோவிலில் இருந்து சாமி தங்க குதிரை வாகனத்திலும், அம்பாள் தங்க சிம்ம வாகனத்திலும் கோவிலின் கிழக்கு வாசல் பகுதிக்கு நேற்று மாலை 6 மணிக்கு எழுந்தருளினர். தொடர்ந்து மூன்று முறை சுவாமி அம்பாள் கோவில் வாசல் பகுதியில் சுற்றி வந்த பின்னர் சாமி 4 முறை அம்பு எய்து சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி அம்பாளுக்கு சிறப்பு மகா தீபாராதனை பூஜைகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் பழனிக்குமார், மேலாளர் சீனிவாசன், பேஷ்கார்கள் கமலநாதன் ராமநாதன், முனியசாமி உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். வழக்கமாக சாமி அம்பு எய்தல் நிகழ்ச்சியானது பத்ரகாளியம்மன் கோவில் அருகே உள்ள மகரநோன்பு திடலில் வைத்து நடைபெறுவது வழக்கம். ஆனால் கொரோனாபரவல் கட்டுப்பாடு நடவடிக்கை காரணமாக 2-வது ஆண்டாக இந்த ஆண்டும் கோவிலின் கிழக்கு வாசலில் பகுதியிலேயே அம்பு எய்தல் நிகழ்ச்சி நடைபெற்றது
Related Tags :
Next Story