இருசக்கர வாகனம் திருடிய 6 பேர் கைது


இருசக்கர வாகனம் திருடிய 6 பேர் கைது
x
தினத்தந்தி 16 Oct 2021 12:03 AM IST (Updated: 16 Oct 2021 12:03 AM IST)
t-max-icont-min-icon

இருசக்கர வாகனம் திருடிய 6 பேர் கைது

சிவகங்கை
சிவகங்கை மாவட்டத்தில் தொடர்ந்து இருசக்கர வாகனங்களை திருடுபவர்களை கண்டுபிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவின் பேரில் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் ரஞ்சித் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் நடத்திய விசாரணையில் சிவகங்கையை சேர்ந்த ஒரு கும்பல் வாகன திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரிந்தது. இதைதொடர்ந்து தனிப்படை போலீசார், வாடிப்பட்டியை அடுத்த மட்டப்பாறையை சேர்ந்த சோணைமுத்து(வயது 25), சிவகங்கை சுண்ணாம்பு காளவாசல் பகுதியை சேர்ந்த அஜித்குமார்(25), நாகராஜ்(23), செல்லப்பாண்டி(27), சிவகங்கை கிருஷ்ணாநகர் 3-வது தெருவை சேர்ந்த சக்கரவர்த்தி(21), திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டியை அடுத்த கவுண்டம்பட்டியை சேர்ந்த அரவிந்த்(21) ஆகிய 6 பேரை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் சிவகங்கை, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சென்னை ஆகிய மாவட்டங்களில் இருசக்கர வாகனங்களை திருடியது தெரிந்தது. இதை தொடர்ந்து அவர்களிடமிருந்து 11 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Next Story