கர்ப்பிணி மனைவியுடன் தொழிலாளி தற்கொலை


கர்ப்பிணி மனைவியுடன் தொழிலாளி  தற்கொலை
x
தினத்தந்தி 16 Oct 2021 12:03 AM IST (Updated: 16 Oct 2021 12:03 AM IST)
t-max-icont-min-icon

திருமணமான 6 மாதத்தில், கர்ப்பிணி மனைவியுடன் தொழிலாளி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியது.

கமுதி
திருமணமான 6 மாதத்தில், கர்ப்பிணி மனைவியுடன் தொழிலாளி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியது.
காதல் திருமணம்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கிளாமரம் கிராமத்தை சேர்ந்தவர் நாகையா. அவருடைய மகன் நாகராஜ் (வயது 27). இவர் ஓட்டலில் வேலை பார்த்து வந்தார்.இதே ஊரைச் சேர்ந்தவர், தனலட்சுமி(20). இவர்கள் இருவரும் காதலித்து 6 மாதத்திற்கு முன்பு இருவீட்டாரின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்டனர். 
தற்போது தனலட்சுமி 4 மாத கர்ப்பிணியாக இருந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் தனியாக வசித்து நிலையில் கொரோனோ பரவல் காரணமாக வேலையின்றி தவித்தனர். 
தற்ெகாலை 
இதன் காரணமாக வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் சிரமப்பட்டனர். இதனால் மனவருத்தம் அடைந்த அவர்கள், தற்கொலை செய்து கொள்ளும் விபரீத முடிவை எடுத்துள்ளனர். 
அதன்படி வீட்டின் கதவை உள்புறமாக பூட்டிக்கொண்டு அவர்கள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
ஆர்.டி.ஓ. விசாரணை
நேற்று முன்தினம் காலை நீண்டநேரம் ஆகியும் அவர்களது வீட்டின் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர், ஜன்னல் வழியாக எட்டி பார்த்தனர். அப்போது வீட்டின் உள்ளே நாகராஜ், தனலட்சுமி தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
கமுதி துணை போலீஸ் சூப்பிரண்டு பிரசன்னா உத்தரவின்பேரில், கமுதி இன்ஸ்பெக்டர் அன்பு பிரகாஷ் உள்ளிட்ட போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். 2 பேரின் உடல்களையும் பரிசோதனைக்காக கமுதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவர்களுக்கு திருமணமாகி  6 மாதமே ஆவதால், இந்த சம்பவம் குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து வருகிறது.
தம்பதியின் தற்கொலைக்கு வேலையின்மைதான் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story