ஆடுகளுக்கு இலை பறிக்க மரத்தில் ஏறிய தொழிலாளி மின்சாரம் தாக்கி சாவு


ஆடுகளுக்கு இலை பறிக்க மரத்தில் ஏறிய தொழிலாளி மின்சாரம் தாக்கி சாவு
x
தினத்தந்தி 16 Oct 2021 12:13 AM IST (Updated: 16 Oct 2021 12:13 AM IST)
t-max-icont-min-icon

மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு

சிவகங்கை 
சிவகங்கை அருகே சுந்தரநடப்பு பகுதியை சேர்ந்தவர் சிதம்பரம்(வயது 51). தொழிலாளி.. இவருக்கு சுமதி என்ற மனைவியும், பிரியா என்ற மகளும் பவின் நாதன் என்ற மகனும் உள்ளனர். சிதம்பரம் தன்னுடைய வீட்டில் ஆடுகள் வளர்த்து வந்தார். 
இந்தநிலையில் நேற்று மாலை ஆடுகளுக்கு இலைபறிக்க அந்த பகுதியில் உள்ள மரத்தில் ஏறி இரும்பு கம்பியால் இலைகளை பறித்தார். அப்போது அவர் வைத்திருந்த இரும்பு கம்பி அருகில் சென்ற மின்வயரில் உரசியது. இதில் அவர் மீது மின்சாரம் தாக்கியது. இந்த விபத்தில் அவர் மரத்தில் தொங்கியபடியே பலியானார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சிவகங்கை தீயணைப்பு நிலைய அலுவலர் செங்கோல்ராஜ் தலைமையில் வீரர்கள் சென்று அவரது உடலை மீட்டனர். இதுதொடர்பாக சிவகங்கை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து மீனாட்சி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story