அரசு பஸ் மோதி பெண் உள்பட 2 பேர் பலி


அரசு பஸ் மோதி பெண் உள்பட 2 பேர் பலி
x
தினத்தந்தி 16 Oct 2021 12:13 AM IST (Updated: 16 Oct 2021 12:13 AM IST)
t-max-icont-min-icon

அரசு பஸ் மோதி பெண் உள்பட 2 பேர் பலியானார்கள்.

திருப்புவனம், 
சிவகங்கை அருகே உள்ள தேவனிப்பட்டியை சேர்ந்தவர்கள் ராஜராஜேஸ்வரி(வயது 38), ஆனந்த வாணி(32). இவர்கள் இருவரும் தனியார் நிறுவனத்தில் பணம் வசூல் செய்யும் ஊழியர்களாக வேலை பார்த்து வந்தனர்.
இந்த நிலையில் இவர்கள் திருப்புவனம் வந்துவிட்டு மீண்டும் பூவந்தி வழியாக சிவகங்கைக்கு தனித்தனி மொபட்டில் சென்றனர். மடப்புரத்தை கடந்து சென்றபோது இவர்களுக்கு முன்னால் சிவகங்கையை சேர்ந்த பாண்டியராஜன்(40) என்பவர் மோட்டார் சைக்கிளில் சென்றார்.
அப்போது மேலூரில் இருந்து திருப்புவனத்திற்கு வந்த டவுன் பஸ் பாண்டியராஜன் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. அதோடு ராஜராேஜஸ்வரி வந்த மொபட் மீதும் மோதியது. பஸ் மோதியதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக அவர்களுக்கு பின்னால் மொபட்டில் வந்த ஆனந்தவாணி உயிர் தப்பினார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவ குழுவினர் ராஜராஜேஸ்வரியை பரிசோதித்த போது அவர் இறந்தது தெரியவந்தது. படுகாயம் அடைந்த பாண்டியராஜனை மீட்டு சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.
விபத்தில் அரசு பஸ் டிரைவர் அய்யரு(43) காயம் அடைந்தார். இச்சம்பவம் குறித்து பூவந்தி போலீசார் பஸ் டிரைவர் அய்யரு மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story