புதுக்கோட்டை சந்தையில் ஆடுகள் விற்பனை சரிவு


புதுக்கோட்டை சந்தையில் ஆடுகள் விற்பனை சரிவு
x
தினத்தந்தி 16 Oct 2021 12:23 AM IST (Updated: 16 Oct 2021 12:23 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை சந்தையில் ஆடுகள் விற்பனை சரிவடைந்தது.

புதுக்கோட்டை, 
புதுக்கோட்டை சந்தைப்பேட்டையில் வாரத்தில் வெள்ளிக்கிழமை தோறும் ஆட்டுச்சந்தை நடைபெறும். இதில் ஆடுகள், செம்மறி ஆடுகள் விற்பனைக்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் கொண்டு வரப்படுவது உண்டு. இதேபோல் வியாபாரிகளும் ஆடுகளை வாங்க வருகை தருவார்கள். 
இந்த நிலையில் நேற்று சந்தையில் ஆடுகள் அதிகம் கொண்டு வரப்பட்டிருந்தாலும் விற்பனை சரிவடைந்திருந்தது. விஜயதசமி பண்டிகை மற்றும் புரட்டாசி மாதத்தின் கடைசி வாரம் என்பதாலும் வியாபாரிகள் அதிகளவில் வரவில்லை. அடுத்த வாரம் ஆட்டுச்சந்தை களை கட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story