வாலிபரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றதால் சாலை மறியல்


வாலிபரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றதால் சாலை மறியல்
x
தினத்தந்தி 16 Oct 2021 12:29 AM IST (Updated: 16 Oct 2021 12:29 AM IST)
t-max-icont-min-icon

தகராறு காரணமாக வாலிபரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஜோலார்பேட்டை,

தகராறு காரணமாக வாலிபரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகராறு

ஜோலார்பேட்டை அருகே உள்ள ஒட்டப்பட்டி பகுதியை சேர்ந்தவர் காந்தி. தற்போது நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். இவர் தனது காரில் தாமலேரிமுத்தூர் கூட்ரோடு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது திரியாலம் கிராமம், டீகார வட்டம் பகுதியைசேர்ந்த  விஜயன் மகன் மணி (வயது23), அவரது நண்பர்கள் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். இரு சக்கர வாகனமும், காரும் மோதும் நிலை ஏற்பட்டு இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. 

இதுகுறித்து காந்தி ஜோலார்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் போலீசார் மணி என்பவரை விசாரணைக்காக ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளனர். 

சாலை மறியல்

இதனால் மணியின் ஆதரவாளர்கள் திருப்பத்தூர் - நாட்டறம்பள்ளி சாலையில் நேற்று மாலை சாலை மறியலில் ஈடுபட்டனர். 

இதுகுறித்து தகவலறிந்த ஜோலார்பேட்டை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத்தொடர்ந்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Next Story