இந்து முன்னணியினர் போராட்டம்
தாணிப்பாறையில் இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வத்திராயிருப்பு,
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு நவராத்திரி இறுதி நாளான நேற்று பக்தர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இந்தநிலையில் வத்திராயிருப்பு அழகாபுரி சாலையில் உள்ள தாணிப்பாறை விலக்கில் சாலையில் அமர்ந்து இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டமானது நேற்று மாலை வரை நீடித்தது. பின்னர் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் இந்து முன்னணியினர் போராட்டத்தை கைவிட்டு பின்னர் தாணிப்பாறை வனத்துறை கேட்டின் முன்பு சென்று சாமி தரிசனம் செய்த பின்னர் அங்கிருந்து சென்றனர்.
Related Tags :
Next Story