சதுரகிரி கோவிலில் அம்பு விடும் நிகழ்ச்சி
சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவிலில் அம்பு விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் ஏமாற்றுத்துடன் திரும்பிச் சென்றனர்.
வத்திராயிருப்பு,
சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவிலில் அம்பு விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் ஏமாற்றுத்துடன் திரும்பிச் சென்றனர்.
பக்தர்கள் ஏமாற்றம்
வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது.
தற்போது கொரோனா தொற்று பரவல் குறைந்ததால் இந்த தடை உத்தரவு நீக்கப்பட்டது.
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் நவராத்திரி திருவிழா 10 நாட்கள் நடைபெற்றது. இறுதிநாளான நேற்று அம்பு விடும் நிகழ்ச்சி நடைபெற்றுது. இதில் மலையேற அனுமதி இருக்கும் என்று நினைத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் தாணிப்பாறை வனத்துறை கேட்டின் முன்பு அதிகாலை முதலே திரண்டனர்.
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்ய தடை நேற்று வரை இருந்ததால் அவர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.
பின்னர் நீண்ட நேர காத்திருப்புக்கு பின்பு வனத்துறை கேட்டின் முன்பு பக்தர்கள் சூடம் ஏற்றி சாமி தரிசனம் செய்து விட்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
அம்பு விடும் நிகழ்ச்சி
சதுரகிரியில், நவராத்திரியின் கடைசி நாளான நேற்று ஆனந்தவல்லி அம்மனுக்கு பால், பழம், பன்னீர், சந்தனம், விபூதி, உள்பட 18 வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அம்மன் மகிஷாசூரமர்த்தினி அலங்காரத்தில் காட்சி தந்தார். தொடர்ந்து நவராத்திரி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
பின்னர் மதியம் 2 மணியில் இருந்து 3 மணி அளவில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் வளாகத்தில் வீதி உலா நடைபெற்றது. அம்மனுக்கு, மலைவாழ் மக்கள் விரதம் இருந்து எடுத்த வந்த முளைப்பாரி வீதி உலா நடைபெற்றது.
பின்னர் ஆனந்தவல்லி அம்மன் அம்பு விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோவில் பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலர் விசுவநாத் மற்றும் நவராத்திரி விழா குழுவினர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story