கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம்
நெல்லையில் கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகையும் நடைபெற்றது.
நெல்லை:
நெல்லையில் கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகையும் நடைபெற்றது.
கோவில்கள் திறப்பு
கொரோனா பரவலை தடுப்பதற்காக தமிழக அரசு வழிபாட்டு தலங்களை திறக்க தடை விதித்து இருந்தது. அதாவது வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் தடை விதித்தது. மற்ற நாட்களில் பக்தர்கள் வழிபட்டு வந்தனர். இந்த நிலையில் தமிழக அரசு நேற்று முன்தினம் அனைத்து வழிபாட்டு தலங்களை அனைத்து நாட்களிலும் திறக்கலாம் என்று அறிவித்தது.
இதையடுத்து நேற்று நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களும் திறக்கப்பட்டன. கோவில்களில் நேற்று புரட்டாசி மாத கடைசி வெள்ளிக்கிழமை என்பதால் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் பக்தர்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து கலந்து கொண்டனர்.
நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவில் நேற்று காலையில் வழக்கம்போல் திறக்கப்பட்டது. இதில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் சுவாமி, அம்பாளை வழிபட்டு வந்தனர்.
பரிவேட்டை
தசரா திருவிழாவையொட்டி நெல்லையப்பர் கோவிலில் இருந்து சுவாமி சந்திரசேகர் வெள்ளி குதிரை வாகனத்தில் பரிவேட்டைக்கு ராமையன்பட்டி சென்றார். அங்கு அம்புவிடும் நிகழ்ச்சி நடந்தது. இதைத்தொடர்ந்து சுவாமி சந்திரசேகரும், புட்டாரத்தி அம்மனும் சப்பரங்களில் காட்சி கொடுக்கும் வைபவம் நடந்தது. இதேபோல் நெல்லை டவுன் சரஸ்வதி கோவில், நெல்லை சந்திப்பு சாலை குமாரசாமி கோவில், பாளையங்கோட்டை சிவன்கோவில், கைலாசநாதர் கோவில், குறுக்குத்துறை முருகன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பள்ளிவாசல்கள்
நெல்லை மாநகர பகுதியில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் நேற்று மதியம் சிறப்பு தொழுகை வழக்கம்போல் நடந்தது.
Related Tags :
Next Story