பால் வியாபாரியிடம் ரூ.35 ஆயிரம் திருட்டு


பால் வியாபாரியிடம் ரூ.35 ஆயிரம் திருட்டு
x
தினத்தந்தி 16 Oct 2021 1:00 AM IST (Updated: 16 Oct 2021 1:00 AM IST)
t-max-icont-min-icon

சிவகாசியில் பால் வியாபாரியிடம் ரூ.35 ஆயிரம் திருடியது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகாசி, 
சிவகாசி சாட்சியாபுரம் என்.ஜி.ஓ. காலனியில் வசித்து வருபவர் சுதாகர் (வயது 45). இவர் பால் வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் வியாபாரத்தில் கிடைத்த ரூ.35 ஆயிரத்தை தனது சரக்கு வாக னத்தில் கொண்டு வந்துள்ளார். வாகனத்தை சாட்சியாபுரத்தில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் நிறுத்திவிட்டு டீசல் போட்டுள்ளார். பின்னர் வந்து பார்த்த போது வாகனத்தில் வைத்திருந்த ரூ.35 ஆயிரத்தை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சிவகாசி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story