விஷம் குடித்து முதியவர் தற்கொலை


விஷம் குடித்து முதியவர் தற்கொலை
x
தினத்தந்தி 16 Oct 2021 1:03 AM IST (Updated: 16 Oct 2021 1:03 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.

விருதுநகர், 
விருதுநகர் அருகே உள்ள ஆர்.ஆர். நகரில் வசிப்பவர் சுதாராணி (வயது 40). இவரது தந்தை பாண்டியன் (77) என்பவரும் இவரது பராமரிப்பில் இருந்துவந்தார். இந்நிலையில் பாண்டியன் தினசரி மது குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதுவரை மூன்று முறை மதுகுடிக்க பணம் கொடுக்காததால் தற்கொலைக்கு முயன்ற பாண்டியனை சுதாராணி காப்பாற்றியுள்ளார். நேற்று முன்தினம் மது குடிக்க பணம் கேட்ட பாண்டியனிடம் பணம் தர மறுத்ததால் கோபத்துடன் அவர் வெளியே சென்றவர் கலெக்டர் அலுவலகம் அருகே மயங்கி கிடந்தார். அங்கிருந்து ஆம்புலன்சில் அவசர சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவர் எலி மருந்தை குடித்து விட்டதாக தெரிய வந்தது. அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த அவர் நள்ளிரவில் ஆஸ்பத்திரியில் இருந்து வெளியேறி உள்ளார். ஆஸ்பத்திரி ஊழியர்கள் தேடியும் கிடைக்காத நிலையில் நேற்று காலை அவர் ஆஸ்பத்திரியின் நுழைவாயிலில் மயங்கி கிடந்தார். ஊழியர்கள் அவரை ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்தபோது டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு பாண்டியன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி சுதாராணி கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Tags :
Next Story