பால்கோவாவிற்கு சிறப்பு அஞ்சல் உறை


பால்கோவாவிற்கு சிறப்பு அஞ்சல் உறை
x
தினத்தந்தி 16 Oct 2021 1:13 AM IST (Updated: 16 Oct 2021 1:13 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவிற்கு சிறப்பு அஞ்சல் உறை வெளியிடப்பட்டது.

ஸ்ரீவில்லிப்புத்தூர்
 விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது பால்கோவா தான். இத்தகைய பெருமை மிக்க பால் கோவாவிற்கு கடந்த 2019-ம் ஆண்டு புவிசார் குறியீடு கிடைத்தது. இந்த புவிசார் குறியீடு கிடைத்ததால் அதனை பெருமைப்படுத்தும் விதமாக அஞ்சல் துறை சார்பில்  சிறப்பு அஞ்சல் உறை வெளியிடும் நிகழ்ச்சி ஸ்ரீவில்லிபுத்தூர் தபால் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு விருதுநகர் அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் கல்யாண வரதராஜன் சிறப்பு அஞ்சல் உறையை வெளியிட்டார். இதனை விருதுநகர் மாவட்ட ஆவின் சேர்மன் கண்ணன் பெற்றுக் கொண்டார். இந்த சிறப்பு அஞ்சல் உரையில் பால்கோவா படம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் ஸ்ரீவில்லிபுத்தூர் தபால் அலுவலக அதிகாரிகள் வில்லி ஆழ்வார் மற்றும் உஷா,  தபால் ஊழியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story