மாவட்ட செய்திகள்

தலைமை ஆசிரியர் மீது தாக்குதல் + "||" + Attack on school head master

தலைமை ஆசிரியர் மீது தாக்குதல்

தலைமை ஆசிரியர் மீது தாக்குதல்
சங்கரன்கோவில் அருகே பள்ளி தலைமை ஆசிரியர் தாக்கப்பட்டார்.
சங்கரன்கோவில்:

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் புதுமனை முதலாவது தெருவைச் சேர்ந்தவர் பார்த்தீபன் (வயது 58). இவர் அங்குள்ள மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், அப்பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது.

சம்பவத்தன்று பார்த்தீபன் தனது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். வீட்டின் அருகில் வளைவில் திரும்பியபோது சிலர் சாலையில் நின்றதாக கூறப்படுகிறது. அவர்களை சாலையோரமாக நிற்குமாறு பார்த்தீபன் கூறினார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. அவர்கள் பார்த்தீபனை சரமாரியாக அடித்து உதைத்து, தாக்கினர். இதில் காயமடைந்த அவர் சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

இதுகுறித்த புகாரின்ேபரில், சங்கரன்கோவில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக சங்கரன்கோவில் புதுமனை முதலாவது தெருவைச் சேர்ந்த முருகன், கணேசன், சங்கர், முத்துவேல் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்கள். தலைமை ஆசிரியரை சரமாரியாக அடித்து உதைத்த காட்சி சமூக வலைதளங்களிலும் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்திகள்

1. விவசாயியை தாக்கிய மகன் உள்பட 6 பேர் மீது வழக்கு
விவசாயியை தாக்கிய மகன் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
2. காங்கோ நாட்டில் சீன தங்க சுரங்கத்தில் தாக்குதல்; 8 சீனர்கள் கடத்தல்
காங்கோ ஜனநாயக குடியரசு நாட்டில் சீன தங்க சுரங்கத்தில் தாக்குதல் நடத்தி 8 சீனர்களை மர்ம நபர்கள் கடத்தி சென்றனர்.
3. மாலியில் பயங்கரவாத தாக்குதல்; 4 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
மாலி நாட்டில் பயங்கரவாத தாக்குதலில் ராணுவ வீரர்கள் 4 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.
4. வாலிபரை கட்டையால் தாக்கியவர் கைது
குளித்தலை அருகே வாலிபரை கட்டையால் தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
5. ரியல் எஸ்டேட் அதிபரை தாக்கிய 3 பேருக்கு வலைவீச்சு
தளவாபாளையம் அருகே ரியல் எஸ்டேட் அதிபரை தாக்கிய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.