கரடிக்கு அடிபணிந்த புலி


கரடிக்கு அடிபணிந்த புலி
x
தினத்தந்தி 15 Oct 2021 8:38 PM GMT (Updated: 2021-10-16T02:08:59+05:30)

பந்திப்பூர் வனப்பகுதியில் கரடியை பார்த்ததும் புலி அடிபணிந்த சம்பவம் நடந்துள்ளது.

கொள்ளேகால்:

  சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை தாலுகாவில் பந்திப்பூர் வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் புலி, சிறுத்தை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் இருக்கின்றது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பந்திப்பூர் வனப்பகுதியில் சுற்றுலா பயணிகள் வனத்துறை ஜீப்பில் சபாரி சென்றனர். அப்போது சுற்றுலா பயணிகளுக்கு ஒரு வினோத சம்பவத்தை பார்த்து கண்டு ரசித்தனர். அதாவது பந்திப்பூர் வனப்பகுதியில் புலி நடமாடி கொண்டிருந்தது. அப்போது புலி எதிரே கரடி ஒன்று வந்தது. இதை கண்ட சுற்றுலா பயணிகள் கரடியை, புலி அடித்து கொல்லும் என்று எதிர்பார்த்தனர்.

  ஆனால் மாறாக, புலியை பார்த்ததும் அந்த கரடி, தான் சண்டைக்கு தயார் என்று கூறுவது போல எழுந்து நின்றது. இதனை பார்த்த புலி, கரடியை பார்த்து அடிபணிந்து கீழே படுத்துக்கொண்டு வாலாட்டியது. இதனை பார்த்து சுற்றுலா பயணிகள் ஆச்சரியம் அடைந்தனர். இதனை தங்கள் கேமரா மற்றும் செல்போன்களில் படம் மற்றும் வீடியோ எடுத்தனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Next Story