கடையின் பின்பக்க கதவை உடைத்து ரூ.1 லட்சம் செல்போன்கள் திருட்டு


கடையின் பின்பக்க கதவை உடைத்து ரூ.1 லட்சம் செல்போன்கள் திருட்டு
x
தினத்தந்தி 16 Oct 2021 2:50 AM IST (Updated: 16 Oct 2021 2:50 AM IST)
t-max-icont-min-icon

கடையின் பின்பக்க கதவை உடைத்து ரூ.1 லட்சம் செல்போன்கள் திருட்டுபோனது.

வி.கைகாட்டி:
அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டியை அடுத்த கிலிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகர்(வயது 34). இவர் வி.கைகாட்டியில் செல்போன் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் ஆயுதபூஜையை முன்னிட்டு இரவில் சாமி கும்பிட்டுவிட்டு, கடையை பூட்டிவிட்டு அவர் வீட்டிற்கு சென்றார். நேற்று காலை வழக்கம்போல் அவர் கடையை திறந்தார். அப்போது, கடையின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து உள்ளே சென்று பார்த்த போது, ரூ.1 லட்சம் மதிப்பிலான செல்போன்கள், கண்காணிப்பு கேமரா காட்சிகளை பதிவு செய்யும் கருவி மற்றும் கடையில் இருந்த ரூ.10 ஆயிரம் ஆகியவை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து ராஜசேகர் அளித்த புகாரின்பேரில் கயர்லாபாத் போலீசார் வழக்குபபதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story