பஸ் நிலையத்தில் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது


பஸ் நிலையத்தில் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 16 Oct 2021 2:50 AM IST (Updated: 16 Oct 2021 2:50 AM IST)
t-max-icont-min-icon

பஸ் நிலையத்தில் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

உடையார்பாளையம்:
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாசிலாமணி மற்றும் போலீசாருக்கு அப்பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து உடையார்பாளையம் புதிய பஸ் நிலையத்தில் போலீசார் சோதனை செய்தபோது 2 வாலிபர்கள் கஞ்சா விற்றது தெரியவந்தது. அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள், ஒக்கநத்தம் கிராமத்தை சேர்ந்த சின்னராசு(வயது 25), உடையார்பாளையத்தை சேர்ந்த பாரதிராஜா(22) என்பது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story