மாவட்ட செய்திகள்

மின்சாரம் பாய்ந்து தந்தை- மகன் பலி + "||" + Father-son death due to electric shock

மின்சாரம் பாய்ந்து தந்தை- மகன் பலி

மின்சாரம் பாய்ந்து தந்தை- மகன் பலி
மின்சாரம் பாய்ந்து தந்தை- மகன் உயிரிழந்தனர்.
குன்னம்:

தந்தை- மகன் சாவு
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள மருவத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்(வயது 42). விவசாயி. இவரது விவசாய நிலத்தில் நெல் பயிரிட்டிருந்தார். அந்த வயல், வனப்பகுதி அருகே உள்ளதால் வன விலங்குகளின் தொல்லை அதிகமாக இருந்ததாகவும், இதன் காரணமாக, வயலை சுற்றி மின் வேலி அமைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று மாலை செந்தில் தனது மகன் தர்மராஜுடன்(15) வயலுக்குச் சென்றார். அப்போது அவரது வயலில் போடப்பட்டிருந்த மின்வேலியில் இருந்து எதிர்பாராதவிதமாக செந்தில் மீது மின்சாரம் பாய்ந்ததில், அவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதை அறியாமல் செந்திலை தொட்ட தர்மராஜும் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.
போலீசார் விசாரணை
இது பற்றி தகவல் அறிந்த மருவத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று, 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வயலில் மின்வேலியில் சிக்கி தந்தை- மகன் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஆட்டோ டிரைவர் பலி; போலீஸ்காரர் படுகாயம்
அருப்புக்கோட்டை அருகே மோட்டார்சைக்கிள்கள் மோதிய விபத்தில் ஆட்டோ டிரைவர் பலியானார். போலீஸ்காரர் படுகாயம் அடைந்தார்.
2. பஸ் மோதி தொழிலாளி சாவு
பஸ் மோதி தொழிலாளி சாவு
3. சாலையில் இறந்து கிடந்த வாலிபர்
வாலிபர் சாலையில் இறந்து கிடந்தார்.
4. மேற்பனைக்காடு பகுதியில்20-க்கும் மேற்பட்ட கால்நடைகள் சாவு இழப்பீடு வழங்க கோரிக்கை
மேற்பனைக்காட்டில் கடந்த சில நாட்களில் 20-க்கும் மேற்பட்ட கால்நடைகள் இறந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். மேலும் இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
5. மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து மூதாட்டி சாவு
மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.