நாட்டறம்பள்ளி அருகே ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்


நாட்டறம்பள்ளி அருகே ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 16 Oct 2021 11:08 AM IST (Updated: 16 Oct 2021 11:08 AM IST)
t-max-icont-min-icon

ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

ஜோலார்பேட்டை

நாட்டறம்பள்ளி பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக திருப்பத்தூர் மாவட்ட வழங்கல் அலுவலர் விஜயனுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் நாட்டறம்பள்ளி வட்ட வழங்கல் அலுவலர் நடராஜன் தலைமையில் குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் செல்வகுமார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூர் சென்றாயசாமி கோவில் அருகே வாகன தணிக்கை செய்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்ததில் லாரியில் 5 டன்ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. விசாரணையில் ஆந்திர மாநிலத்துக்கு அரிசி கடத்தியது தெரியவந்தது. 5 டன் ரேஷன் அரிசியை லாரியுடன் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். லாரி டிரைவர் பச்சூர் அடுத்த ஆத்துமேடு பகுதியை சேர்ந்த சாமுடி என்பவரது மகன் பிரபு (வயது 21) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Next Story