வாணியம்பாடி அருகே புல்லூர் தடுப்பணை நிரம்பி ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்


வாணியம்பாடி அருகே புல்லூர் தடுப்பணை நிரம்பி ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்
x
தினத்தந்தி 16 Oct 2021 11:08 AM IST (Updated: 16 Oct 2021 11:08 AM IST)
t-max-icont-min-icon

வாணியம்பாடி அருகே உள்ள புல்லூர் தடுப்பணை நிரம்பி ஆர்ப்பரித்து தண்ணீர் கொட்டுகிறது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வாணிம்பாடி

வாணியம்பாடி அருகே உள்ள புல்லூர் தடுப்பணை நிரம்பி ஆர்ப்பரித்து தண்ணீர் கொட்டுகிறது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை  விடுக்கப்பட்டுள்ளது.

ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே தமிழக- ஆந்திர எல்லைப் பகுதியில் கடந்த ஒரு மாதமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகா மாநிலம் கிருஷ்ணராஜசாகர் அணை மற்றும் பேத்தமங்கலம் ஏரி நிரம்பி அதிகளவில் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது, இதனால் ஆந்திர எல்லை பகுதிகளான இரட்டை பாலாறு, பெரும்பள்ளம் ஆகிய பகுதிகளில் கட்டப்பட்டுள்ள தடுப்பணைகளை தாண்டி தமிழக எல்லையில் உள்ள புல்லூர் வழியாக பாலாற்றுக்கு அதிக அளவில் தண்ணீர் வரத்தொடங்கி உள்ளது.

இதனால் வாமியம்பாடி பகுதியில் உள்ள புல்லூர் தடுப்பணை நிரம்பி அதில் இருந்து வெளியேறும் தண்ணீர் அதிக அளவில் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அணை நிரம்பி வழியவால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கிடா வெட்டி வழிபட்டு வருகின்றனர்.

 வெள்ள அபாய எச்சரிக்கை

மேலும் ஆந்திர தடுப்பணை பகுதி மற்றும் தமிழக எல்லையில் உள்ள கனக நாச்சியம்மன் கோவில் பகுதிக்கு செல்ல பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் ஆந்திரா அரசு தடை விதித்துள்ளது. அதேபோல் பாலாற்று படுகையில் உள்ள திம்மாம்பேட்டை, அம்பலூர், கொடையாஞ்சி உள்ளிட்ட ஆற்றங்கரையோர மக்களுக்கு தமிழக அரசு சார்பில் தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.

அதேபோன்று தடுப்பணைகள் கட்டி தண்ணீரை சேமித்துவைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story