ராணுவ அருங்காட்சியகத்தை பார்வையிட்ட வெளிநாட்டு அதிகாரிகள்


ராணுவ அருங்காட்சியகத்தை பார்வையிட்ட வெளிநாட்டு அதிகாரிகள்
x
தினத்தந்தி 16 Oct 2021 7:56 PM IST (Updated: 16 Oct 2021 7:56 PM IST)
t-max-icont-min-icon

ராணுவ அருங்காட்சியகத்தை பார்வையிட்ட வெளிநாட்டு அதிகாரிகள்

குன்னூர்

வெலிங்டன் எம்.ஆர்.சி. முகாமில் உள்ள ராணுவ அருங்காட்சியகத்தை  வெளிநாட்டு அதிகாரிகள் பார்வையிட்டனர்.

ராணுவ பயிற்சி கல்லூரி

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே வெலிங்டனில் ராணுவ பயிற்சி கல்லூரி உள்ளது. 

இந்த கல்லூரியில் இந்திய நாட்டை சேர்ந்த முப்படை அதிகாரிகள் மட்டுமின்றி இந்தியாவின் நட்பு நாடுகளை சேர்ந்த முப்படை அதிகாரிகளும் பயிற்சி பெற்று வருகின்றனர்.

தற்போது ராணுவ கல்லூரியில் 77-வது பயிற்சியை அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள். வெலிங்டன் பேரக்சில் உள்ள எம்.ஆர்.சி. ராணுவ முகாமில் அருங்காட்சியகம் உள்ளது. 


இங்கு எம்.ஆர்.சி. ராணுவ முகாமின் தோற்றம், ராணுவ வீரர்களின் சீருடை மற்றும் தொப்பி, பழமையான ஆயுதங்கள் ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளன.

அருங்காட்சியகம்

இந்த அருங்காட்சியகத்தை பார்வையிட ராணுவ முகாமில் பயிற்சி பெறும் வெளிநாட்டு ராணுவ அதிகாரிகள் 22 பேர் வந்தனர். 

அவர்களுக்கு,  அருங் காட்சியகத்தில் இடம் பெற்று உள்ள சாதனங்களின் சிறப்பு, பாரம்பரியம் ஆகியவை குறித்து எம்.ஆர்.சி. ராணுவ அதிகாரிகள் விளக்கி கூறினர்.


பின்னர், வெளிநாட்டு ராணுவ அதிகாரிகள், எம்.ஆர்.சி. ராணுவ முகாம் கமாண்டெண்ட் பிரிகேடியர் ராஜேஸ்வர்சிங்கை சந்தித்து பேசினர். 

இந்திய ராணுவத்தின் பாரம்பரியம் மற்றும் பெருமை ஆகியவற்றை தெரிந்து கொள்ள வாய்ப்பாக அமைந்தது என்று வெளிநாட்டு ராணுவ அதிகாரிகள் கூறினர்.


Next Story