புதிய நீதிமன்ற கட்டிடம் கட்ட வேண்டும்


புதிய நீதிமன்ற கட்டிடம் கட்ட வேண்டும்
x
தினத்தந்தி 16 Oct 2021 7:58 PM IST (Updated: 16 Oct 2021 7:58 PM IST)
t-max-icont-min-icon

புதிய நீதிமன்ற கட்டிடம் கட்ட வேண்டும்

கோத்தகிரி

கோத்தகிரி தாசில்தார் அலுவலக கட்டிடத்தின் தரைதளத்தில் மாவட்ட குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. 


எனவே நீதிமன்றத்திற்கு தனியாக புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என வக்கீல் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வந்தனர். 

அதன்பேரில் கடந்த 2 ஆண்டுக ளுக்கு முன்பு கோத்தகிரி சக்தி மலைப்பகுதியில் புதிய கட்டிடம் கட்ட 50 சென்ட் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு நில அளவை பணிகள் நடைபெற்றன. ஆனால் கட்டிட பணிகள் தொடங்கப்படவில்லை. 

எனவே கோத்தகிரியில் புதிய நீதிமன்ற கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி ஊட்டிக்கு வந்திருந்த சென்னை ஐகோர்ட்டு நீதிபதி சதீஷ்குமாரை கோத்தகிரி வக்கீல்கள் சங்க நிர்வாகிகள் பாலசுப்ரமணி, குயிலரசன், உதயகுமார், மோகன், ரவி ஆகியோர் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். 

அது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐகோர்ட்டு நீதிபதி உறுதி அளித்தார்.


Next Story