தேனி மாவட்டத்தில் மாயமான 125 செல்போன்கள் மீட்பு


தேனி மாவட்டத்தில் மாயமான 125 செல்போன்கள் மீட்பு
x
தினத்தந்தி 16 Oct 2021 8:33 PM IST (Updated: 16 Oct 2021 8:33 PM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தில் மாயமான 125 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

தேனி :
தேனி மாவட்டத்தில் செல்போன் திருட்டு போனது மற்றும் காணாமல் போனது தொடர்பாக போலீஸ் நிலையங்களில் மக்கள் புகார் கொடுத்தனர். இதையடுத்து மாயமான செல்போன்களை கண்டுபிடிக்கும் பணியில் தனிக்கவனம் செலுத்த சைபர் கிரைம் போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே உத்தரவிட்டார்.
அதன்பேரில் சைபர் கிரைம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாக்கியம், ஏட்டு அருள்ராஜ் உள்ளிட்ட தனிப்படையினர் மாயமான செல்போன்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அந்த வகையில் கடந்த 3 மாதங்களில் 125 செல்போன்களை போலீசார் மீட்டனர். அவ்வாறு மீட்கப்பட்ட செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் பணி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று நடந்தது. அப்போது மீட்கப்பட்ட செல்போன்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே பார்வையிட்டு அதை உரியவர்களிடம் ஒப்படைத்தார். மேலும் இந்த பணியில் சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு தெரிவித்தார். அப்போது தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் உடனிருந்தார்.

Next Story