பணம் கேட்டு மிரட்டிய வழக்கு பா.ஜ.க. முன்னாள் நிர்வாகி கைது


பணம் கேட்டு மிரட்டிய வழக்கு பா.ஜ.க. முன்னாள் நிர்வாகி கைது
x
தினத்தந்தி 16 Oct 2021 8:36 PM IST (Updated: 16 Oct 2021 8:36 PM IST)
t-max-icont-min-icon

பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் பா.ஜ.க. முன்னாள் நிர்வாகி கைது செய்யப்பட்டார்.

போடி:
போடி தங்கமுத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலு (வயது 55). போடி அமராவதி நகரை சேர்ந்தவர் பார்த்திபன்(33). இவர் தனது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து பணம் கேட்டு மிரட்டியதாக போடி டவுன் போலீஸ் நிலையத்தில் பாலு கடந்த 8 மாதத்துக்கு முன்பு புகார் செய்து இருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பார்த்திபனை தேடினர். அப்போது அவர் தலைமறைவாகி விட்டார். 
இதையடுத்து போடி டவுன் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு அவர்கள் தலைமறைவாக இருந்த பார்த்திபனை தேடிவந்தனர். இந்தநிலையில் நேற்று அதிகாலை பார்த்திபன் வீட்டுக்கு வந்து இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் விரைந்து சென்று பார்த்திபனை கைது செய்தனர். பின்னர் அவர் உத்தமபாளையம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பெரியகுளம் சிறையில் அடைக்கப்பட்டார்.
கைதான பார்த்திபன் பா.ஜ.க. மாநில மீனவரணி முன்னாள் அமைப்பாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story