காதல் மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் தற்கொலை


காதல் மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 16 Oct 2021 8:45 PM IST (Updated: 16 Oct 2021 8:45 PM IST)
t-max-icont-min-icon

விக்கிரவாண்டி அருகே காதல் மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

விக்கிரவாண்டி, 

விக்கிரவாண்டி அருகே உள்ள குத்தாம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் திருமாறன்(வயது 28). இவர் சென்னை துரைபாக்கத்தில் தனது அண்ணன் மணிமாறன் பழக்கடையில் வேலை பார்த்து வந்தார். இவர், கடந்த 5 ஆண்டுக்கு முன்பு அதே ஊரை சேர்ந்த ராமமூர்த்தி மகள் விஜயலட்சுமி(25) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்தநிலையில் கடந்த 2 மாதத்திற்கு முன்பு கணவர், மனைவி இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதனால் திருமாறனிடம் இருந்து பிரிந்து விஜயலட்சுமி தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். 

தீக்குளித்து தற்கொலை 

இதற்கிடையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு சென்னையில் இருந்து திருமாறன், சொந்த ஊருக்கு வந்தார். காதல் மனைவி பிரிந்து சென்று விட்டாரே என்று மன உளைச்சலில் இருந்த திருமாறன், நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் குத்தாம்பூண்டி சுடுகாடு அருகே தன் மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். 
உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்ததால் வலிதாங்க முடியாமல அவர் அலறினார். அவரது சத்தம் கேட்டு அந்த பகுதியை சேர்ந்தவர்கள் ஓடிவந்து, தீயை அணைத்து அவரை மீட்டனர். இருப்பினும் அவரது உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே திருமாறன் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story