புரட்டாசி மாத 5 வது சனிக்கிழமை பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


புரட்டாசி மாத 5 வது சனிக்கிழமை பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 16 Oct 2021 9:32 PM IST (Updated: 16 Oct 2021 9:32 PM IST)
t-max-icont-min-icon

புரட்டாசி மாத 5 வது சனிக்கிழமையையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கிருஷ்ணகிரி:
புரட்டாசி மாத 5-வது சனிக்கிழமையையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
புரட்டாசி மாத சனிக்கிழமை 
கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் வழிபட தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதில் வெள்ளி, சனி. ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் வழிபடலாம் என அறிவிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 4 வாரங்களாக புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. ஆனால் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. நேற்று புரட்டாசி மாத 5-வது மற்றும் கடைசி சனிக்கிழமையையொட்டி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதையொட்டி திரளான பக்தர்கள் காலையிலேயே நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் சாமி தரிசனம்
அந்த வகையில் கிருஷ்ணகிரியில் பிரசித்தி பெற்ற கணவாய்ப்பட்டி வெங்கட்டரமண சாமி கோவில், பொன்மலை சீனிவாச பெருமாள் கோவில், பாளேகுளி அனுமந்தராய சாமி கோவில், கிருஷ்ணகிரி காட்டு வீர ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் உள்ள பெருமாள் கோவில், மலையப்ப சீனிவாச பெருமாள் கோவில், நவநீத வேணுகோபால சாமி கோவில், ஐகுந்தம் புதூர் பெருமாள் கோவில் உள்பட அனைத்து பெருமாள் கோவில்களிலும் நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதில் கணவாய்ப்பட்டி பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களில் ஏராளமான பக்தர்கள் மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். இதையொட்டி பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தப்பட்டனர். இதேபோன்று மாவட்டத்தில்  உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் புரட்டாசி மாத 5-வது சனிக்கிழமையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story