புரட்டாசி மாத 5 வது சனிக்கிழமை பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


புரட்டாசி மாத 5 வது சனிக்கிழமை பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 16 Oct 2021 4:02 PM GMT (Updated: 16 Oct 2021 4:02 PM GMT)

புரட்டாசி மாத 5 வது சனிக்கிழமையையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தர்மபுரி:
புரட்டாசி மாத 5-வது சனிக்கிழமையையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சிறப்பு வழிபாடு
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் புரட்டாசி மாத 5-வது சனிக்கிழமையையொட்டி நேற்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதையொட்டி சாமிக்கு அதிகாலை முதல் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. நேற்று சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டதால் மகிழ்ச்சி அடைந்த பக்தர்கள் கோவில்களில் குவிந்தனர்.
தர்மபுரி கோட்டை வர மகாலட்சுமி உடனாகிய பரவாசுதேவ சுவாமி கோவிலில் புரட்டாசி மாத 5-வது சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் மற்றும் மஹா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் தர்மபுரி கடைவீதி பிரசன்ன வெங்கட்ரமண சாமி கோவில், குமாரசாமிப்பேட்டை பூதேவி, ஸ்ரீதேவி சமேத சென்னகேசவ பெருமாள் கோவில் ஆகிய கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
அதகபாடி
இதேபோன்று ஒட்டப்பட்டி வள்ளுவர் நகரிலுள்ள லட்சுமி நரசிம்ம வெங்கடேச பெருமாள் கோவில், அதகபாடி லட்சுமி நாராயணசாமி கோவில், பழைய தர்மபுரி வரதகுப்பம் வெங்கட ரமண சாமி கோவில், சோகத்தூர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத திம்மராய பெருமாள் கோவில், செட்டிகரை பெருமாள் கோவில், மூக்கனூர் அக்கமனஅள்ளி ஆதிமூல வெங்கட்ரமணசாமி கோவில், மணியம்பாடி வெங்கட்ரமண சாமி கோவில் உள்ளிட்ட அனைத்து பெருமாள் கோவில்களிலும் புரட்டாசி மாத 5-வது சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
இதேபோன்று அரூர், பென்னாகரம், பாலக்கோடு, பாப்பாரப்பட்டி, மிக்கனஅள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி, மொரப்பூர், கம்பைநல்லூர், ஏரியூர், நல்லம்பள்ளி, கடத்தூர், மாரண்டஅள்ளி, பொம்மிடி உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள பெருமாள் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
காரிமங்கலம்
காரிமங்கலம் அக்ரஹாரம் லட்சுமி நாராயண சாமி கோவில், காட்டுசீகலஅள்ளி சஞ்சீவிராயன் பெருமாள் கோவில், கோவிலூர் சென்னகேசவ பெருமாள் கோவில், மோதூர் பெருமாள் கோவில், பிக்கனஅள்ளி சென்னகேசவ பெருமாள் ஆகிய கோவில்களில் நேற்று சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story