உடைந்து கிடக்கும் விளையாட்டு உபகரணங்கள்
உடைந்து கிடக்கும் விளையாட்டு உபகரணங்கள்
திருப்பூர்,
திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் வேலை செய்து வருகிற தொழிலாளர்களுக்கு வாரந்தோறும் சனிக்கிழமை சம்பளம் வழங்கப்படும். ஞாயிற்றுக்கிழமை இந்த தொழிலாளர்களுக்கு விடுமுறை ஆகும். இந்த விடுமுறையை கொண்டாடும் விதமாக பலரும் மாநகரில் ஆங்காங்கே உள்ள பூங்காங்களுக்கு குடும்பத்துடன் சென்று மகிழ்கிறார்கள். இந்நிலையில் கொரோனா பாதிப்பினால் பல மாதங்களுக்கு பிறகு மீண்டும் பூங்காக்கள் திறக்கப்பட்டு செயல்பட தொடங்கியுள்ளன.
ஆனால் திருப்பூர் பார்க் ரோட்டில் உள்ள மாநகராட்சி வெள்ளி விழா பூங்கா உள்பட பல பூங்காக்களில் சிறுவர்-சிறுமிகள் விளையாடும் விளையாட்டு உபகரணங்கள் பலவும் உடைந்து கிடக்கின்றன. இன்னமும் அவை சரி செய்யப்படாமல் உள்ளன. இதனால் சிறுவர்-சிறுமிகள் பலரும் பூங்காவிற்கு சென்று ஏமாற்றம் அடையும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பூங்காக்களில் உடைந்து கிடக்கிற விளையாட்டு உபகரணங்களை சீரமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story