சாலையில் குவிந்து கிடக்கும் குப்பைகள்
சாலையில் குவிந்து கிடக்கும் குப்பைகள்
தாராபுரம்,
தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட மணியம்மை நகரிலிருந்து புதிய பஸ் நிலையம் செல்லும் சாலையில் கடந்த ஒரு வார காலமாக குப்பைகள் குவிந்து கிடக்கிறது.
குவிந்து கிடக்கும் குப்பைகள்
தாராபுரம் பகுதியில் பிரதான சாலையாக விளங்குவது மணியம்மை நகருக்கு செல்லும் சாலை. இந்த சாலை தினசரி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லும் மிக முக்கிய பகுதியாக விளங்கி வருகிறது. இப்பகுதியை சுற்றி சுமார் 1000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் 3 சந்திப்பு சாலையில் குவிக்கப்படும் குப்பைகளால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு வருகிறது.
மேலும் அனைத்து வீடுகளிலும் சிறுவர்களும், குழந்தைகளும் இருப்பதால் கொசுக்கள் அதிகரித்து நாள்தோறும் நோய்த்தொற்றுக்கு ஆளாக வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. தூய்மைப்பணியாளர்களும் இவ்வழியே நாள்தோறும் 20 முறைக்கும் மேலாக சென்றாலும், குவிந்து கிடக்கும் குப்பைகளை அப்புறப்படுத்தும் எண்ணம் ஏற்படுவதில்லை.
நகராட்சி நடவடிக்கை எடுக்குமா?
சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகத்திடம் இதுகுறித்து கூறினால் அப்போது மட்டுமே குப்பைகள் அகற்றப்படுகிறது. பின்பு மறுபடியும் தேங்கிக் கிடக்கும் சூழல் ஏற்படுகிறது. அத்துடன் நகரின் பிரதான சாலையில் தேங்கி இருக்கும் குப்பைகளுடன் கடை வியாபாரிகள் அழுகிய காய்கறிகளை, கழிவுகளை கொட்டி செல்வதால் நாய்கள் மற்றும் பெருச்சாளிகள் அதிக தொல்லை கொடுத்து வருகிறது.
தற்போது தாராபுரம் பகுதியில் கொரோனா வைரஸ் பரவி உயிர்கள் பலியாகும் சூழலில், குப்பைகள் அப்புறப்படுத்தாமல் அதன் மூலம் தொற்று நோய் பரவி உயிர் பலியாகும் சூழல் உள்ளது.
நகராட்சி நிர்வாகம் உடனடியாக சாலையோரம் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story