பாதுகாப்பான நிதி நிறுவனங்களில் மக்கள் முதலீடு செய்ய வேண்டும்


பாதுகாப்பான நிதி நிறுவனங்களில் மக்கள் முதலீடு செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 16 Oct 2021 10:08 PM IST (Updated: 16 Oct 2021 10:08 PM IST)
t-max-icont-min-icon

பாதுகாப்பான நிதி நிறுவனங்களில் மக்கள் முதலீடு செய்ய வேண்டும்

அனுப்பர்பாளையம், 
திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் நேற்று அங்கேரிப்பாளையத்தில் உள்ள கொங்கு மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது. முகாமுக்கு பள்ளியின் துணை முதல்வர் விஜயா வரவேற்றார். மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையாளர் பாலமுருகன் வாழ்த்தி பேசினார். விரைவுநீதிமன்ற நீதிபதி ராமநாதன் பேசும்போது, தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாக திருப்பூர் உள்ளது. தொழில் நிறுவனங்களில் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை எந்த வகையில், எவ்வாறு சேமிக்க வேண்டும் என்பதில் மக்களுக்கு விழிப்புணர்வு அவசியம். தனியார் நிதி நிறுவனங்கள் முறையாக பதிவு செய்திருக்க வேண்டும். அரசின் வழிகாட்டுதலின்படி கணக்கு விவரங்களையும் தாக்கல் செய்ய வேண்டும். நெறிமுறைப்படுத்தப்பட்ட நிதி நிறுவனங்களில் மக்கள் பணத்தை சேமிப்பது வெளிப்படைத்தன்மையாகவும், பாதுகாப்பானதாகவும் இருக்கும். அங்கீகாரம் இல்லாத நிதி நிறுவனங்களில் முதலீடு செய்வது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வது போன்றதாகும். மக்கள் தங்கள் பணத்தை பாதுகாப்பான, நம்பகத்தன்மையான நிறுவனங்களில் முதலீடு செய்ய வேண்டும் என்றார்.
இலவச சட்ட வக்கீல் அழகர் சரவணன் சிறப்புரையாற்றினார். முடிவில் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முனியம்மாள் நன்றி கூறினார். இதில் பொதுமக்கள், ஆசிரியர்களுக்கு சட்டம் சார்ந்த சந்தேகங்களுக்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன.


Next Story