வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது


வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 16 Oct 2021 10:19 PM IST (Updated: 16 Oct 2021 10:19 PM IST)
t-max-icont-min-icon

வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

பெருமாநல்லூர்,
பெருமாநல்லூரை சேர்ந்த  16 வயது சிறுமி கடந்த ஏப்ரல் மாதம் கடைக்குச்செல்வதாக கூறி விட்டு வீட்டை விட்டு சென்றவர் திரும்ப வரவில்லை. இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் மகளை கண்டுபிடித்து தருமாறு பெருமாநல்லூர் போலீசில் புகார் அளித்தனர். புகாரை பெற்றுக்கொண்ட பெருமாநல்லூர் போலீசார் சிறுமி காணாமல் போனதாக வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இந்த நிலையில், நேற்று, திருப்பூர் புதிய பஸ் நிலையத்தில் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்று, சிறுமியை அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில், தேனி சின்னமனூரை சேர்ந்த மணிகண்டன் (வயது28)  திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி தேனிக்கு அழைத்துச்சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து  மணிகண்டன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து  கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Next Story