மின்கம்பி அறுந்து விழுந்து ஆடுகள் செத்தன


மின்கம்பி அறுந்து விழுந்து ஆடுகள் செத்தன
x
தினத்தந்தி 16 Oct 2021 10:39 PM IST (Updated: 16 Oct 2021 10:39 PM IST)
t-max-icont-min-icon

கிருமாம்பாக்கம் அருகே மழையின்போது மின்கம்பிகள் அறுந்து விழுந்து ஆடுகள் பலியாகின.

பாகூர், அக்.
கிருமாம்பாக்கம் அருகே மழையின்போது மின்கம்பிகள் அறுந்து விழுந்து ஆடுகள் பலியாகின.
மின்கம்பி அறுந்து விழுந்தது
கிருமாம்பாக்கம் அடுத்த பனித்திட்டு கிராமத்தை சேர்ந்தவர் பாஞ்சாலி (வயது 70). இவர் 2 ஆடுகள் வளர்த்து வந்தார். நேற்று காலை மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகள் மதியம் வீட்டுக்கு வந்தன. பின்னர் வீட்டின் அருகில் உள்ள கொட்டகையில் ஆடுகளை பாஞ்சாலி கட்டி வைத்திருந்தார். 
இந்த நிலையில் மாலையில் திடீரென்று மழை பெய்தது. அப்போது பாஞ்சாலி வீட்டின் மீது சென்ற தெருமின்விளக்கின் மின்கம்பிகள் திடீரென்று அறுந்து கொட்டகை மீது விழுந்தது. இதில் மின்சாரம் தாக்கி 2 ஆடுகளும் பரிதாபமாக செத்தன.
மின் வினியோகம் துண்டிப்பு
இதுபற்றி தகவல் அறிந்த கிருமாம்பாக்கம் போலீசார், மின்துறையினர் அங்கு விரைந்து வந்தனர். உடனடியாக அந்த பகுதியின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. பின்னர் இறந்த ஆடுகள் அங்கிருந்து அகற்றப்பட்டது.
மின்கம்பிகள் அறுந்து விழுந்த நேரத்தில் மக்கள் நடமாட்டம் இல்லாததால் பெரிய அளவிலான அசம்பாவிதம் ஏற்படவில்லை. மின்கம்பிகள் அறுந்து விழுந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story