தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்


தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
x
தினத்தந்தி 16 Oct 2021 10:39 PM IST (Updated: 16 Oct 2021 10:39 PM IST)
t-max-icont-min-icon

கன்னிவாடி அருகே நடந்த கோவில் திருவிழாவில் தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.


கன்னிவாடி:

கன்னிவாடி அருகே உள்ள டி.பண்ணைபட்டி பெருமாள் புதூர், குட்டிக்கரட்டில் மகாலட்சுமி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 2 நாட்கள் திருவிழா நடந்தது. 

இதையொட்டி முதல் நாளில் கணபதி, மகாலட்சுமி ஹோமம், புண்ணிய அர்ச்சனை, தீர்த்தம் எடுத்து வருதல், ஆதிசக்தி அழைத்தல், மகாலட்சுமி தாயார் பூப்பல்லக்கில் பவனி வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.

2-வது நாள் திருவிழாவையொட்டி அதிகாலையில் சக்தி அழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. இதைத்தொடர்ந்து மகாலட்சுமி தாயார், முத்தாலம்மன் பல்லக்கில் பவனி வந்து கோவிலை சென்றடைந்தது. 

மேலும் கோவிலில் மகாலட்சுமி தாயார், கிச்சாலம்மன், காளியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. கருடன் வரவுக்காக மக்கள் காத்திருந்தனர். கருடன் வந்ததும் தீபங்கள் ஏற்றப்பட்டு, பக்தர்களின் கரவொலி முழங்க 55 பக்தர்களுக்கு தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடந்தது.
 
30 நாட்கள் விரதம் இருந்த பக்தர்களின் தலையில் தேங்காய் உடைக்கப்பட்டது. அப்போது பக்தர்கள் பக்தி பரவசம் அடைந்தனர். விழாவையொட்டி நேற்று காலை முதல் மாலை வரை அன்னதானம் நடந்தது. விழாவுக்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள், விழாக்குழுவினர் செய்திருந்தனர்,

Next Story