மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல் விவசாயிகள் கவலை
மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.
சிறுபாக்கம்,
மங்களூர் ஒன்றியத்தில் 66 ஊராட்சிகள் உள்ளது. இப்பகுதி விவசாயிகள் பெரும்பாலும் மானாவாரி பயிர்களான மக்காச்சோளம், பருத்தி, எள், வரகு, கடலை பயிர்கள் சாகுபடி செய்வது வழக்கம்.
நடப்பாண்டில் 18 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் மக்காச்சோளம் பயிரை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். அவ்வப்போது பெய்த பருவ மழையை பயன்படுத்தி, மருந்து தெளித்து, அடி உரமிட்டு வருகின்றனர்.
தற்போது, மக்காச்சோளம் கதிர் தண்டு வளரும் காலத்தில், அதன் இலை மற்றும் தண்டு பகுதிகளில் படைப்புழு தாக்கியுள்ளது. உழவு, விதை, உரம் உள்பட ஏக்கருக்கு பல ஆயிரம் ரூபாய் செலவு செய்த விவசாயிகள், படைப்புழு தாக்குதலால், மகசூல் பாதிக்கும் என கவலை அடைந்துள்ளனர்.
எனவே, மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தவும், பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story