திண்டுக்கல்லில் விளம்பர பேனர்கள் அகற்றம்
திண்டுக்கல்லில் அனுமதியின்றி வைத்திருந்த விளம்பர பேனர்கள் அகற்றப்பட்டன.
திண்டுக்கல்:
திண்டுக்கல் பஸ் நிலைய பகுதியில் அனுமதி இல்லாமல் விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டு இருப்பதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து விளம்பர பேனர்களை அகற்றும்படி மாநகராட்சி கமிஷனர் சிவசுப்பிரமணியன் உத்தரவிட்டார். அதன்பேரில் மாநகராட்சி அதிகாரிகள் நேற்று பஸ் நிலையத்துக்கு வந்து பார்வையிட்டனர்.
அப்போது பஸ்நிலைய பகுதியில் பல இடங்களில் விளம்பர பேனர்கள் இருந்ததை கண்டனர். இதை தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன், மாநகராட்சி அதிகாரிகள் 20-க்கும் மேற்பட்ட விளம்பர பேனர்களை அகற்றினர். மேலும் அனுமதி இல்லாமல் விளம்பர பேனர்களை வைப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்தனர்.
Related Tags :
Next Story