சின்னசேலம் அருகே இளம்பெண் தூக்குப் போட்டு தற்கொலை
சின்னசேலம் அருகே இளம்பெண் தூக்குப் போட்டு தற்கொலை
சின்னசேலம்
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அருகே மேல் வாழைப்பந்தல் கிராமத்தைச் சேர்ந்த முத்து. இவருடைய மகள் நந்தினி(வயது 22) கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள செல்லியம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த துரைசாமி என்பவரது வீட்டில் கடந்த 3 வருடங்களாக தங்கி இருந்து பருத்தி வயலில் வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று நந்தினி துரைசாமி வீட்டில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றிய தகவல் அறிந்து வந்த சின்னசேலம் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். நந்தினி அவரது பக்கத்து ஊரான அல்லேரி கிராமத்தை சேர்ந்த வாலிபருடன் செல்போனில் பேசிவந்ததை அவரது தாய் ராணி கண்டித்ததாகவும், இதனால் விரக்தி அடைந்த நந்தினி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story