்பாலாற்று வெள்ளத்தில் கூட்டுக்குடிநீர் திட்ட ராட்சத வால்வு மூழ்கியது
பாலாற்று வெள்ளத்தில் கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் வால்வுகள் மூழ்கியதால் காவிரி குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
ஆம்பூர்
பாலாற்று வெள்ளத்தில் கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் வால்வுகள் மூழ்கியதால் காவிரி குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
ஆந்திரா மற்றும் வாணியம்பாடி, ஆம்பூரபகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சாமியார் மடம் அருகே உள்ள காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் ராட்சத வால்வு வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் வால்வை திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது மேலும் அந்தப் பகுதி சேரும் சகதியுமாக உள்ளதால் ஊழியர்கள் அதில் சிக்கும் அபாயம் உள்ளது.
இந்த வால்வு திறக்கப்பட்டால் தான் ஆம்பூர், பேரணாம்பட்டு, மாதனூர் பள்ளிக்கொண்டா, வேலூர் ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம் வரை உள்ள மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்ய முடியும். பாலாற்றில் வெள்ளப்பெருக்கு தொடர்ந்து அதிகரித்து வருவதால் குடிநீர் விநியோகம் செய்வதில் தடை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீரான குடிநீர் வினியோகம் செய்ய போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story