நிலத்தகராறில் கோஷ்டி மோதல்; 2 பேர் கைது


நிலத்தகராறில் கோஷ்டி மோதல்; 2 பேர் கைது
x
தினத்தந்தி 16 Oct 2021 11:21 PM IST (Updated: 16 Oct 2021 11:21 PM IST)
t-max-icont-min-icon

பாணாவரம் அருகே கோஷ்டி மோதலில் ஈடுபட்ட 2பேரை போலீசார் கைது செய்தனர்.

காவேரிப்பாக்கம்

ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரத்தை அடுத்த பழையபாளையம் மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வேலாயுதம் (வயது 39). இவரது மனைவி வள்ளி. இதே பகுதியைச் சேர்ந்தவர்கள் அல்லிமுத்து-அஞ்சலா தம்பதியர். இவர்களது மகன்கள் சந்தோஷ் (19), சிவலிங்கம்.

இந்த நிலையில் சந்தோஷ் தரப்பினர் தாங்கள் புதிதாக வாங்கிய நிலத்தை பொக்லைன் எந்திரம் மூலம் சமன் செய்து கொண்டிருந்தனர். 

அப்போது அங்கு வந்த பக்கத்து நிலத்துக்காரரான வேலாயுதம், நிலத்தை அளவீடு செய்யாமல் ஏன் சீரமைத்து கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டுள்ளார்.

அப்போது இரு தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு இரும்புக் கம்பி, கட்டையால் சரமாரியாக தாக்கி கொண்டதாக தெரிகிறது. 

இது குறித்து இரு தரப்பினரும் பாணாவரம் போலீஸ் நிலையத்தில் தனித்தனியாக புகார் அளித்தனர். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து இரு தரப்பைச் சேர்ந்த சந்தோஷ், வேலாயுதம் ஆகிய 2 பேரையும் கைது செய்தார்.

Next Story