திருவண்ணாமலை மாவட்டத்தில் 21 பேருக்கு கொரோனா


திருவண்ணாமலை மாவட்டத்தில் 21 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 16 Oct 2021 5:51 PM GMT (Updated: 16 Oct 2021 5:51 PM GMT)

திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 21 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா பரவல் வெகுவாக குறைந்துள்ளது.

தொற்று பாதிப்பு மேலும் அதிகரிக்காமல் இருப்பதற்கான தடுப்பு நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது. 

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ் நிலையங்கள், பஜார், கடைவீதிகளில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. 

மேலும் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாத நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று முன்தினம் 20 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், நேற்றைய பரிசோதனையில் மேலும் 21 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. 

அதையடுத்து அவர்கள் சிகிச்சை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் தற்போது கொரோனாவினால் பாதிக்கப்பட்ட 250-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 

தொற்றினால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story