பெண்ணிடம் 3½ பவுன் தங்கச்சங்கிலி பறிப்பு


பெண்ணிடம் 3½ பவுன் தங்கச்சங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 16 Oct 2021 11:36 PM IST (Updated: 16 Oct 2021 11:36 PM IST)
t-max-icont-min-icon

பெண்ணிடம் 3½ பவுன் தங்கச்சங்கிலி மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.

புதுக்கோட்டை:
புதுக்கோட்டை அடப்பன் வயல் பகுதியை சேர்ந்த மல்லிகா (வயது 57). இவர் காமராஜபுரம் பகுதியில் நடந்து சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 2 பேர், அவரது கழுத்தில் கிடந்த 3½ பவுன் தங்கச்சங்கிலியை பறித்து விட்டு தப்பிச்சென்றனர். இது தொடர்பாக கணேஷ்நகர் போலீஸ் நிலையத்தில் மல்லிகா அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சங்கிலி பறிப்பு திருடர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story