கீரனூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்;தி.மு.க. பிரமுகர் உள்பட 2 பேர் பலி
கீரனூர் அருகே 2 மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் தி.மு.க.பிரமுகர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
கீரனூர்:
தி.மு.க.பிரமுகர்
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் தாலுகா அலுவலகம் பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன். இவரது மகன் அமர் (வயது 25). புஷ்பா நகரை சேர்ந்த சிமியோன் ராஜ் மகன் ஜூடோ ெரக்ஸ் (25). இவர் கீரனூர் தி.மு.க. நகர இளைஞரணி துணை அமைப்பாளராக இருந்து வந்தார். இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் கீரனூர்-திருச்சி ரோட்டில் உள்ள அய்யப்பன் கோவில் எதிேர சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பெரிய சூரியூரை சேர்ந்த கொத்தனரான காமராஜ் (40) மற்றும் கீரனூர் திடீர் நகரை சேர்ந்த சுந்தரம் மனைவி போதும் பொண்ணு (42) ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக 2 மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியது.
2 பேர் பலி
இதில் சம்பவ இடத்திலேயே ஜூடோ ெரக்ஸ் மற்றும் காமராஜ் ஆகிய 2 பேரும் பரிதாபமாக இறந்தனர். மற்ற 2 பேரும் படுகாயமடைந்தனர். இந்த விபத்தை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் படுகாயமடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கீரனூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கீரனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் விபத்தில் இறந்த ஜூடோ ெரக்ஸ் மற்றும் காமராஜ் ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கீரனூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் 2 பேர் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story