வாலிபர் தீக்குளித்து தற்கொலை


வாலிபர் தீக்குளித்து தற்கொலை
x
தினத்தந்தி 17 Oct 2021 12:32 AM IST (Updated: 17 Oct 2021 12:32 AM IST)
t-max-icont-min-icon

வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

பேட்டை:

சுத்தமல்லியை அடுத்த நரசிங்கநல்லூா் பிள்ளைமாா் தெருவைச் சோ்ந்தவா் நடராஜன். இவருடைய மகன் இசக்கிமுத்து (வயது 23). சற்று மனநிலை பாதிக்கப்பட்ட இவர் மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் இசக்கிமுத்து வீட்டில் இருந்தபோது திடீரென்று தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார்.

இதில் உடல் கருகி பலத்த காயமடைந்த இசக்கிமுத்துவை பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி இரவில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில், சுத்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story