பட்டாசு கடை அமைக்க விரும்புபவர்கள் 22-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்
தீபாவளி பண்டிகையையொட்டிபட்டாசு கடை அமைக்க விரும்புபவர்கள் 22-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்
சிவகங்கை,
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
வருகிற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில், தற்காலிகமாக பட்டாசு சில்லறை விற்பனை கடைகள் அமைக்க விரும்புபவர்களிடமிருந்து ஏற்கனவே கடந்த மாதம் 30-ந்தேதி வரை விண்ணப்பங்கள் இணையவழி மூலமாக பெறப்பட்டது. தற்போது இணையவழியாக தற்காலிக பட்டாசுக்கடை வைப்பதற்கு விண்ணப்பம் செய்திட வருகிற 22-ந்தேதி வரை விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே, தற்காலிக பட்டாசுக்கடை அமைத்து விற்பனை செய்ய விரும்புபவர்கள் இணையவழியாக வருகிற 22-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story